ஹாலிவுட் செல்லும் காஜல் அகர்வால்.. ஹாட் போட்டோஷூட் வெளியீடு!

Kajal Agarwal will act in a Hollywood Movie soon

இந்திய நடிகைகள் அவ்வப்போது ஹாலிவுட் படங்களில் நடிக்க கமீட் ஆவது அதிகரித்து வருகிறது. தற்போது அந்த வரிசையில் நடிகை காஜல் இணைந்துள்ளார்.

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால், அடுத்து ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே என பல பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். தமிழில் இருந்து நிவேதா பெத்துராஜும் அடுத்ததாக ஹாலிவுட்டுக்கு செல்ல உள்ளார்.

இந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழியில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட உள்ள ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க கமீட் ஆகியுள்ளார்.

விரைவில் அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஃபர்ஸ்ட் லுக்குடன் மிரட்ட வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் வேளையில், டார்க் மோடில் மிகவும் கிளாமரான உடையில் காஜல் அகர்வால் ஃபேஷன் மேகஸின் ஒன்றுக்காக நடத்தியுள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

You'r reading ஹாலிவுட் செல்லும் காஜல் அகர்வால்.. ஹாட் போட்டோஷூட் வெளியீடு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஹியூமன் கம்ப்யூட்டர் சகுந்தலா தேவி ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்