மீண்டும் மார்வெல் படத்தில் அயன்மேன் ஹீரோ டோனி ஸ்டார்க்!

Iron Man may be come back in Black Widow solo movie

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் இறந்துவிடும் அயன்மேன் கதாபாத்திரம் மீண்டும் மார்வெல் படமொன்றில் வரும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மார்வெல் திரையுலகின் முதல் சூப்பர் ஹீரோ கதாபாத்திரமான அயன்மேன், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் தானோஸுடன் நடக்கும் யுத்தத்தில் தானோஸை அழித்து தானும் இறந்துவிடுவார்.

அயன்மேன் கதாபாத்திரம் இறந்த காட்சிகளை பார்த்த மார்வெல் ரசிகர்கள் இதற்கு மேல், மார்வெல் படங்களில் அயன்மேனை காண முடியாது என்ற ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், அயன்மேன் கதாபாத்திரம் பிளாக் விடோவின் படத்தில் மீண்டும் வர உள்ள செய்தி வெளியாகி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

மார்வெல் தயாரிப்பில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் வெளியாவதற்கு முன்பாகவே அனைத்து கதாபாத்திரங்களுக்கான தனி படம் வெளியாகி பயங்கர ஹிட்டானது.

ஆனால், இதுவரை பிளாக் விடோவுக்கான தனி படம் வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு வெளிவர உள்ள பிளாக் விடோ படத்தில் கெளரவ தோற்றத்திலாவது டோனி ஸ்டார்க் அயன்மேன் லுக்கில் வந்து பார்வையாளர்களை கவர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading மீண்டும் மார்வெல் படத்தில் அயன்மேன் ஹீரோ டோனி ஸ்டார்க்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்.. தேமுதிக வலியுறுத்தல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்