சைராவின் உரிமையை கைப்பற்றிய சூப்பர் குட் பிலிம்ஸ்!

Super Good Films bagged TN rights of Syerra

சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.

நாட்டாமை, பூவே உனக்காக, அவள் வருவாளா, சமுத்திரம், துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி என ஆல் டைம் ஃபேவரைட் படங்களை தயாரித்து வெளியிட்ட சூப்பர் குட் பிலிம்ஸ், சமீப காலமாக எந்த ஒரு அப்டேட்டும் வெளியிடாமல் இருந்து வந்தது. கடைசியாக அதன் தயாரிப்பில் வெளியான ஜில்லா, கடம்பன், மொட்டை சிவா கெட்ட சிவா படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில், நேற்று சூப்பர் குட் பிலிம்ஸ் திடீரென தனது சமூக வலைதள பக்கமான ட்விட்டரில், நாளைக்கு மிகப்பெரிய அப்டேட் இருக்கிறது என ட்வீட் செய்தது.

எந்த ஹீரோவை வைத்து புதிய படம் எடுக்க போகின்றனர் என்ற எதிர்பார்ப்பில் கோலிவுட்டினர் திரும்பி பார்க்க, தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் தமிழ் பதிப்பு உரிமையையும் வெளியீட்டு உரிமையையும் சூப்பர் குட் பிலிம்ஸ் வாங்கியுள்ளது.

இந்த படத்தில் சிரஞ்சிவி, அமிதாப் பச்சன், விஜய்சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதிப் என நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். நாளை இந்த படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. மேலும், வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி வெளியீடாக படம் ரிலீசாக இருக்கிறது.

You'r reading சைராவின் உரிமையை கைப்பற்றிய சூப்பர் குட் பிலிம்ஸ்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிகில் வெளியீட்டு தேதியில் மீண்டும் குழப்பம்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்