காஜல் அகர்வாலை மயக்கிய தாஜ் மஹால்!

KajalAggarwal visited TajMahal

தாஜ் மஹாலின் அழகினை பிறர் சொல்ல கேட்பதை விடவும், டிவி மற்றும் சினிமாக்களில் காண்பதை விடவும், நேரில் கண்டு ரசிப்பது தான் உண்மையில் அதன் முழு பூரணத்தையும் உணர முடியும். அப்படி ஒரு அனுபவத்தை இப்போது தான் நடிகை காஜல் அகர்வால் அனுபவித்துள்ளார்.

இந்தியன் 2 ஷூட்டிங்கில் பிசியாக நடித்து வரும் காஜல் அகர்வால், அடுத்ததாக ஹாலிவுட்டுக்கு செல்லும் முனைப்புடனும் செயல்பட்டு வருகிறார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள பாரீஸ் பாரீஸ் படம் சில மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய்க் கொண்டு இருக்கின்றன.

குயின் பட ரீமேக் என்பதால், இந்த படத்தின் மீது காஜல் அகர்வால் அதிக எதிர்பார்ப்பு கொண்டுள்ளார்.இந்நிலையில், தற்போது தாஜ்மகாலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்துள்ள குறும்புத்தனமான புகைப்படங்களை இணையத்தில் காஜல் அகர்வால் பதிவிட்டுள்ளார்.

அதில், தாஜ் மகாலின் அழகு குறித்து பலர் சொல்ல கேட்டிருக்கிறேன் தற்போது தான் அந்த அழகை நேரில் கண்டு மயங்கி நிற்கிறேன் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் பதிவிட்டுள்ளார்.

அவரது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

You'r reading காஜல் அகர்வாலை மயக்கிய தாஜ் மஹால்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுதந்திர தீயை மூட்டும் சைரா நரசிம்ம ரெட்டி டிரைலர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்