என்ன பேச போகிறார் விஜய்? இன்று பிகில் இசை வெளியீட்டு விழா!

Bigil Audio Launch held on today

பிகில் படத்தின் வெளியீட்டுக்கு முன்பு விஜய் ரசிகர்களை கடந்து விஜய் இன்று என்ன பேச போகிறார் என அனைத்து மீடியாக்களும், சினிமா பிரபலங்களும் அரசியல்வாதிகளும் எதிபார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

மெர்சல், சர்கார் இசை வெளியீட்டு விழாக்கள் சன் டிவியில் கடந்த இரண்டு ஆண்டுகளும் லைவ் நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு மிகப்பெரிய சென்ஷேசனை உருவாக்கியது.

உசுப்பேத்துறவங்ககிட்ட உம்முன்னு கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னும் இருந்தா லைஃப் ஜம்முன்னு இருக்கும்னு சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது மிகப்பெரிய வைரலானது.

மேலும், ரஜினியை போலவே விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற ஆதங்கமும் ஆர்வமும் அனைவரிடமும் மேலும் அதிகரிக்கும் வண்ணம் விஜய் எதையாவது பேசுவார் என்ற எதிர்பார்ப்பு தான் அவரது இசை வெளியீட்டு விழாவையே திருவிழாவாகா மாற்ற காரணமாக அமைந்து வருகிறது.

பிகில் இசை வெளியீட்டு விழா மேடை முழுவதும் பிரம்மாண்டமாக தயாராகி விட்டது. இசை வெளியீட்டு விழாவின் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானாக இருந்தாலும், விஜய் பட இசை வெளியீட்டு விழாவில் இறுதியாக அவர் பேசும் பேச்சுக்காக தான் அனைவரும் வெயிட்டிங்! என்ன பேசப்போகிறார் விஜய்?

You'r reading என்ன பேச போகிறார் விஜய்? இன்று பிகில் இசை வெளியீட்டு விழா! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தீபாவளி ரேசில் தைரியமாக களமிறங்கும் தமன்னா!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்