அசுரனை முந்தும் நம்ம வீட்டு பிள்ளை!

NVP will release before Asuran

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை படம் இம்மாத இறுதியில் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகிறது.

இறுதியாக பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில், தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், பாரதிராஜா, சமுத்திரகனி, ஆர்.கே. சுரேஷ், சூரி என நட்சத்திர பட்டாளத்துடன் அண்ணன் தங்கை பாசத்தோடு உருவாகியுள்ளது நம்ம வீட்டு பிள்ளை.

இந்த படத்திற்கு தற்போது யு சான்றிதழ் தணிக்கை குழுவினரால் வழங்கப்பட்டுள்ளது. காமெடி, செண்டிமெண்ட் மற்றும் மாஸ் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த கமர்ஷியல் கலவையாக உருவாகியுள்ள இந்த படம் சிவகார்த்திகேயனின் தொடர் தோல்விகளை மாற்றி வெற்றி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீமராஜா, மிஸ்டர் லோக்கல் திரைப்படங்கள் படு தோல்வியை சந்தித்த நிலையில், சிவகார்த்திகேயனுக்கும் நம்ம வீட்டு பிள்ளை படத்தின் வெற்றி முக்கியமாக பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 4ம் தேதி தனுஷின் அசுரன் படம் வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக செப்டம்பர் 27ம் தேதி நம்ம வீட்டு பிள்ளை ரிலீசாகிறது.

You'r reading அசுரனை முந்தும் நம்ம வீட்டு பிள்ளை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிறுமியை துன்புறுத்தியதாக பானுப்பிரியா மீது வழக்கு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்