பாலிவுட் பிதாமகருக்கு தாதா சாகேப் பால்கே விருது!

Central Government announced Dadasaheb Phalke award to Amitabh Bachan

பாலிவுட் பிதாமகராக கொண்டாடப்படும் இந்தியாவின் சிறந்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

1970களில் இருந்து பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். 76 வயதிலும், தனக்கான சிறந்த நடிப்பு தீணி போடும் கதாபாத்திரங்களையும் கதைகளையும் தேர்வு செய்து நடித்து விருதுகளை குவித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கை தான் நடிகர் அஜித் தமிழில் நேர்கொண்ட பார்வையாக நடித்திருந்தார்.

தமிழகத்தின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சனின் பல படங்களை ரீமேக் செய்து தான் இங்கே பில்லாவாக மாறினார்.

இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான நடிகர் அமிதாப் பச்சனுக்கு இந்திய சினிமாவின் உச்ச பட்ச விருதான தாதா சாகேப் பால்கே விருது ஒருமனதாக எந்தவொரு போட்டியும் இன்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் இருந்து அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து மழை குவிகிறது.

You'r reading பாலிவுட் பிதாமகருக்கு தாதா சாகேப் பால்கே விருது! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்... 8 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்