ஹீரோ டைட்டிலுக்கு சிவகார்திகேயன்-விஜய் தேவரகொண்டா மோதல்... வக்கீல் நோட்டீஸ் பறந்தது..

vijay devarakonda company send Advocate notice to sivakarthikeyan

சிவகார்கார்திகேயன். அர்ஜூன். கல்யாணி நடிக்கும் புதிய படத்துக்கு ஹீரோ என டைட்டில் வைக்கப்பட்டி ருக்கிறது. இப்படத்தை மித்ரன் டைரக்ட் செய்கிறார்.

இந்திலையில் விஜய் தேவர்கொண்டா (நோட்டா. அர்ஜூன் ரெட்டி பட நடிகர்) நடிக்கும் படத்துக்கும் ஹீரோ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இது சர்ச்சை ஆகியிருக்கிறது. சிவகார்த்திகேயன் படத்துக்கு வைத்த டைட்டிலை மாற்ற வேண்டும் என்று விஜய் தேவரகொண்டா பட தயாரிப்பாளர் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்.
இதுகுறித்து விஜய தேவர்கொண்டா பட தயாரிப்பாளர் எம்.மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நான் டிரைபல் ஆர்டஸ்( Tribal Arts) நிறுவனம் சார்பாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன் . எனது நிறுவனத்தின் பெயரில் கடந்த 04.07.2017- அன்று “ஹீரோ” என்ற படத்தலைப்பினை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து, முறையாக புதுப்பித்து 03.06.2020-ம் ஆண்டு வரை உரிமம் பெற்றுள்ளேன்.

“ஹீரோ” என்ற எங்களது தலைப்பில் ஆனந்த் அண்ணா மலையின் எழுத்து - இயக்கத்தில் , விஜய் தேவர கொண்டா மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையா ளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பான செய்திகள் பத்திரிக்கை, தொலைக்காட்சி, மற்றும் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.

இந்த சூழ்நிலையில் சில மாதங்களாக தமிழ் மொழியில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் (KJR studios) என்கிற தயாரிப்பு நிறுவனம் “ஹீரோ” என்ற தலைப்பில் வேறொரு கதாநாயகனை (சிவகார்திகேயன்) வைத்து படம் தயாரிப்பதாக பத்திரிக்கை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மற்றும் அனைத்து ஊடகங்களிலும் செய்திகளை வெளியிட்டு வந்தனர்.

இதனை கண்டு தயாரிப்பாளர் சங்கத்தை நாங்கள் அணுகிய போது, அவர்கள் கடந்த 16 ஏப்ரல் 2019 அன்று எங்களது தலைப்பினை பயன்படுத்திவரும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு இப்படத்தின் தலைப்பினை பயன்படுத்தக் கூடாது என்று செயலாளர் எஸ். எஸ். துரைராஜ் கையொப்பமிட்ட கடிதத்தை அனுப்பி வைத்து, கடிதத்தின் நகலையும் எங்களுக்கு கொடுத்து உறுதி அளித்தார்கள்.

0

ஆனால் KJR studios தயாரிப்பு நிறுவனம், தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மீறி (02.09.2019) அன்று பத்திரிக்கை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மற்றும் அனைத்து ஊடகங்களிலும் “ஹீரோ” என்ற தலைப்பில் போஸ்டர்களை வெளியிட்டனர்.

ஆகவே KJR studios தயாரிப்பு நிறுவனத்திற்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You'r reading ஹீரோ டைட்டிலுக்கு சிவகார்திகேயன்-விஜய் தேவரகொண்டா மோதல்... வக்கீல் நோட்டீஸ் பறந்தது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அருண் விஜய் விஜய் ஆண்டனியுடன் இணையும் அக்‌ஷரா ஹாசன்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்