தமன்னாவுக்கு விலை உயர்ந்த மோதிரம் பரிசு.. சிரஞ்சிவி பட தயாரிப்பாளரின் ஸ்பெஷல் கிப்ட்..

Tamanna received a special present from Upasana

சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி என பெரிய நட்சத்திர பட்டாளமும் நடித்திருக்கிறது.

சிரஞ்சீவி நடிப்பை போலவே தமன்னாவின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்து வருகிறது. மேலும் இப்படத்தின புரமோஷன் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 4 மொழிகளில் நடந்தது. சிரஞ்சீவி மற்றும் படக்குழுவினருடன் தமன்னா கலந்துகொண்டார்.

நயன்தாராவை பங்கேற்ற மறுத்துவிட்டார்..சைரா... பட புரமோஷன் நிகழ்ச்சியில் தமன்னா பங்கேற்றது அப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பட தயாரிப்பாளர்களில் ஒருவரான ராம் சரணின் மனைவி உபசனா, தமன்னாவுக்கு விலை உயர்ந்த மிகப்பெரிய கிரிஸ்டல் மோதிரம் ஒன்றை பரிசளித்திருக்கிறார்.

இதுபற்றி உபசன்னா கூறும்போது,'தமன்னாவுக்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தரப்படும் கிப்ட் இந்த மோதிரம். இத்தனை நாள் படப்பிடிப்பு, புரமோஷனில் உடனிருந்த தமன்னாவை தற்போது ரொம்பவே மிஸ் செய்கிறேன். விரைவில் இருவரும் சந்திப்போம்' என குறிப்பிட்டிருக்கிறார். தமன்னாவும், உபசனாவும் நெருங்கிய தோழிகளாக பழகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading தமன்னாவுக்கு விலை உயர்ந்த மோதிரம் பரிசு.. சிரஞ்சிவி பட தயாரிப்பாளரின் ஸ்பெஷல் கிப்ட்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அசுரன் படம் 450 தியேட்டரில் சிறப்பு காட்சிகள்.. தனுஷ் படத்துக்கு கர்நாடகாவில் தியேட்டர்கள் அதிரிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்