விஜய் 64ல் இணைந்த ஆடை பட இயக்குனர்

Aadai director Rathna Kumar joins Thalapathy 64

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய்-64 படத்தின் படப்பிடிப்பு கடந்த 3ம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

மேலும் இவர்களுடன் விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்டனி வர்க்கீஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் திரைக்கதை அமைப்பில் மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமாரும் பணியாற்றுகிறார் .

'ஆடை', 'சிந்துபாத்' படங்களின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில், என்னுடைய இயக்குநர் ரத்னகுமார் மிகப் பெரிய தளபதி வெறியன். இப்போது தளபதி 64 படத்துக்கு ரைட்டர். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழத்துகள் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் லோகேஷ் கனகராஜுடன் ஆடை பட இயக்குனர் ரத்னகுமார் விஜய்-64 படத்தில் பணியாற்றுவது உறுதியாகியுள்ளது.

You'r reading விஜய் 64ல் இணைந்த ஆடை பட இயக்குனர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமன்னாவுக்கு விலை உயர்ந்த மோதிரம் பரிசு.. சிரஞ்சிவி பட தயாரிப்பாளரின் ஸ்பெஷல் கிப்ட்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்