மனைவி குழந்தையுடன் கடற்கரையில் காற்றுவாங்கிய அஜீத்..

Ajith spends time with son Aadvik and wife Shalini at chennai beach

விஸ்வாசம் படம் 200 கோடி வசூலுடன் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தல அஜித் தற்போது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சினிமாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறாரோ அதே அளவுக்கு தனது குடும்பத்தினர் மீதும் அக்கறை கொண்டிருக்கிறார் அஜீத்.

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கடற் பகுதியில் தனது மகன் ஆத்விக் மற்றும் மனைவி ஷாலினியுடன் ஜாலியாக விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

வீரம், விவேகம், என்னை அறிந்தால், விஸ்வாசம் என 4 படங்களிலும் அஜீத் பெப்பர் சாலட் ஹேர் ஸ்டைல் தோற்றத்தில் நடித்து வந்தார் அடுத்து அவர் நடிக்கும் படத்துக்கு கறுப்பு டை அடித்து ஹேர் ஸ்டைலை பிளாக் நிறத்துக்கு மாற்றியிருக்கிறார். ரொம்ப நாட்களுக்கு பிறகு அஜீத்தை இளமை தோற்றத்தில் பார்க்கவிருப்பதில் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

அஜீத் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அதிகம் வெளியில் தலைகாட்டுவதில்லை. பாதுகாப்பு காரணங்களால் அவர் எப்போதாவது சில சமயம்தான் வெளி இடங்களில் தென்படுகிறார்.

You'r reading மனைவி குழந்தையுடன் கடற்கரையில் காற்றுவாங்கிய அஜீத்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஜய் பிகில் பட வதந்திக்கு ஃபுல்ஸ்டாப்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்