பிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா?

Prabhas to make announcement about wedding on his birthday?

பிரபாஸ், அனுஷ்கா காதல் விவகாரம் வெறும் புரளி என்றும், இருவரும் திருமணம் செய்யப்போவது நிஜம்தான் என்றும் திரையுலகில் மாறி மாறி பேச்சு நிலவுகிறது.

யார் என்ன பேசினாலும் இருவரும் கவலைப்பட்டதுபோல் தெரியவில்லை. நாங்கள் இருவரும் நண்பர்க்ள் மட்டுமே என்று எப்போதுகேட்டால் கிளிப்பிள்ளைப்போல் ஒரே பதிலை இருவரும் சொல்கின்றனர். இதனால் திருமண கிசுகிசு பிசுபிசுத்துப்போயிருந்தது. தற்போது மீண்டும் இருவரும் திருமணம் செய்வார்கள் என்ற பேச்சு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

வரும் 23ம் தேதி பிரபாஸுக்கு பிறந்த நாள், அன்றைய தினம் தனது திருமண அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. அதற்கு பலம்சேர்ப்பதுபோல் முன்னதாக வரும் 19ம் தேதி பிரபாஸ், அனுஷ்கா இருவரும் லண்டனில் நடக்கவுள்ள திரைப்பட இசை அமைப்பாளர் கீரவாணியின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.

ஒரே மேடையில் பிரபாஸ், அனுஷ்கா இருவரும் தோன்றவிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அன்றைய தினம் திருமண அறிவிப்பு பற்றிய தகவல் வெளியாகவும் வாய்ப்பிருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

ஒருவேளை பிரபாஸ் திருமண அறிவிப்பை வெளியிட்டால் மணப்பெண் அனுஷ்காவாக இருப்பாரா? அல்லது குடும்பத்தினர் பார்க்கும் பெண்ணாக இருப்பாரா என்ற பேச்சு தற்போது நிலவிவருகிறது.

You'r reading பிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தி பேசி நடித்தார் கீர்த்தி... பாலிவுட்டில் சாதிப்பாரா? திரும்பி வருவாரா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்