ரூ. 100 கோடி வசூல் எட்டிய தனுஷின் அசுரன்...

Asuran Enters 100 Crore Club

தனுஷ் நடிக்க வெற்றிமாறன் இயக்கிய படம் அசுரன் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது.

நிலத்தின் உரிமைக்காகவும். தனது குடும்பத்துக்காவும் ஆவேசமாக போராடும் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ள மஞ்சுவாரியர் முதன்முறையாக இப்படம் மூலம் தமிழில் நடித்திருக்கிறார். தனுஷின் மனைவியாக அவரது கதாபாத்திரமும் இப்படத்தில் பேசப்பட்டது.

அனைத்து தரப்பினரிடமிருந்தும் இப்படத்துக்கு பாசிடிவான விமர்சனங்கள் கிடைத்ததுடன் காலா, கபாலி படங்களை இயக்கிய பா.ரஞ்சித் மனம் திறந்து வெற்றிமாறனுக்கும், தனுஷுக்கும் பாராட்டு தெரிவித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையும் படத்துக்கு பிளஸ் ஆக அமைந்தது.

இப்படம் 100 கோடி வசூலை எட்டி உள்ளதாக பட நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரூ. 100 கோடி வசூலில் தனுஷ் படம் இணைவது இதுவே முதல்முறை.

You'r reading ரூ. 100 கோடி வசூல் எட்டிய தனுஷின் அசுரன்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜெயம் ரவி படத்தில் மீண்டும் இணையும் யோகி பி டி.இமான் இசையில் புதிய ராப் பாடல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்