வாணிபோஜன் நடிக்கும் படம் ஓ மை கடவுளே... டிவியிலிருந்து சினிமாவுக்கு தாவினார்..

Vani Bhojans role in Oh My Kadavule revealed

டி.வி சீரியல்கள் தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகியவற்றில் நடித்த புகழ் பெற்றவர் வாணிபோஜன்.

இவர் சினிமா நடிகையானால் வரவேற்பு கிடைக்கும் என்று பேசப்பட்ட நிலையில் திடீரென்று சமீபத்தில் திரைப்படத் தில் நடிக்க ஒப்பந்தமானார். பின்னர் கால்ஷீட் தேதி பிரச்சனை காரணமாக விலகியதாக கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் அசோக்குமார் மற்றும் இறுதிச்சுற்று ஹீரோயின் ரித்திகா சிங் நடித்து வரும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி யுள்ளார் வாணி போஜன்.

வாணி போஜன் அறிமுகமாகும் இந்த படத்திற்கு ஓ மை கடவுளே என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தை டில்லிபாபுவின் ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கின்றது. லியோ ஜேம்ஸ் இசையமைக்கின்றார்.

You'r reading வாணிபோஜன் நடிக்கும் படம் ஓ மை கடவுளே... டிவியிலிருந்து சினிமாவுக்கு தாவினார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்