நடிகர் சங்க தேர்தல் செல்லாது .... ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்...

Nadigar Sangam polls invalid, TN govt tells HC

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்தது. விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் புதிய நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிட்டன.

தேர்தலின் முடிவை தெரிந்து கொள்ள நடிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் தேர்தலை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணாமல் நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்த வழக்கு விசாரணை மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. அதில் நடிகர் சங்க தேர்தல் சட்டப்படி நடத்தப்படாததால் இந்த தேர்தல் செல்லாது என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading நடிகர் சங்க தேர்தல் செல்லாது .... ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வாணிபோஜன் நடிக்கும் படம் ஓ மை கடவுளே... டிவியிலிருந்து சினிமாவுக்கு தாவினார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்