அனிருத் அளித்த ரஜினியின் தர்பார் அப்டேட்.. நவம்பர் 7ல் மோஷன் போஸ்டர். தீம் மியூசிக் எப்போது?..

Darbar Update: Anirudh Ravichander makes a special announcement

லைகா நிறுவனம் தயாரிக்கும் தர்பார்' படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேட்ட' படம் மூலம் முதல் முறையாக ரஜினி படத்திற்கு இசை அமைத்த அனிருத் அடுத்து தர்பார் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக ரஜினி படத்திற்கு இசை அமைத்து வருகிறார். இந்நிலையில் தனது பிறந்த நாளையொட்டி அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் தர்பார் அப்டேட் பகிர்ந்துள்ளார்.

அதில், 'என்னுடைய இந்த சிறப்பான நாளில் இந்த தகவலை உங்களுக்கு கொடுப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

வரும் நவம்பர் மாதம் 7ம் தேதி தர்பார் படத்தின் பர்ஸ்ட் மோஷன் போஸ்டரும், தலைவரின் தீம்மியூசிக்கும் வெளியாக இருக்கிறது' என பதிவிட்டுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

You'r reading அனிருத் அளித்த ரஜினியின் தர்பார் அப்டேட்.. நவம்பர் 7ல் மோஷன் போஸ்டர். தீம் மியூசிக் எப்போது?.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சந்தானம் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அறிமுகம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்