இறுதிசுற்று நடிகை ரித்திகாவுக்கு லக் அடிக்குமா?.. விஜய்சேதுபதி, அசோக் செல்வனுடன் இணைகிறார்

Ritika Singh and Ashok Selvan joined hands in Oh My Kadavule

அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிக்கும் படம் ஓ மை கடவுளே'. ரித்திகா சிங் ஏற்கனவே இறுதி சுற்று படத்தில் நடித்திருந்ததுடன் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, வணங்காமுடி, படங்களில் நடித்திருக்கிறார்.

ஓ மை கடவுளே படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இதில் டிவி சீரியலில் நடித்த புகழ்பெற்ற வாணி போஜனும் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதுடன் ஓ மை கடவுளே படத்தின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய்சேதுபதி, ரித்திகா சிங் இணைந்து நடித்திருந்தனர். அவர்கள் இருவரும் ஓ மை கடவுளே படத்தில் மீண்டும் இணைந்திருக்கின்றனர். நீண்டநாட்களுக்கு பிறகு ரித்திகா சிங் நடிக்கிறார். படம் அவருக்கு திருப்புமுனை தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

You'r reading இறுதிசுற்று நடிகை ரித்திகாவுக்கு லக் அடிக்குமா?.. விஜய்சேதுபதி, அசோக் செல்வனுடன் இணைகிறார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வடிவேலு படத்தை கைப்பற்றிய யோகிபாபு.. பேய் மாமாவாகிறார்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்