கமலின் மகள் சூப்பர் ஸ்டாரின் மகளானார் .. தர்பார் பற்றி நிவேதா தாமஸ் புது தகவல்...

Kamals daughter is the daughter of the superstar

பாபநாசம், நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா போன்ற படங்களில் தங்கை மற்றும் மகள் வேடங்களில் நடித்துள்ள நிவேதா தாமஸ், தர்பார் படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருக்கிறார். தர்பார் படத்தின் படப்பிடிப்பை ரஜினி சமீபத்தில் முடித்தார்.

இதன் டப்பிங் பணிகள் நடக்கவிருக்கிறது. நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பை முடித்த கையோடு இமயமலை சென்று 5 நாள் சுற்றுப்பயணத்துக்கு பிறகு சென்னை திரும்பினார்.

தர்பாரில் தான் நடிக்கும் கதாபாத்திரம்பற்றி நிவேதா தாமஸ் கூறும்போது,'இப்போது உலகம் இதையறிந்து கொள்ளட்டும்! இங்கு ஒரேயொரு ஆதித்ய அருணாச்சலம் மட்டுமே இருக்க முடியும். அவர் எனது தந்தை' என குறிப்பிட்டிருக்கிறார்.

தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடிப்பதை வெளிப்படுத்தியுள்ள நிவேதா, ரஜினியின் கதாபாத்திர பெயர் ஆதித்ய அருணாச்சலம் என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார். கபாலியில் ரஜினியின் மகளாக சாய் தன்ஷிகா நடித்தபோது அவருக்கு ரசிகர்கள் ஏக வரவேற்பு தந்ததுபோல் தற்போது நிவேதாவையும் ரஜினி ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கி உள்ளனர்.

பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாக நிவேதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading கமலின் மகள் சூப்பர் ஸ்டாரின் மகளானார் .. தர்பார் பற்றி நிவேதா தாமஸ் புது தகவல்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கார்த்தியால் ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் போலீஸான நரேன்.. லோகேஷ்கனகராஜ் 50 இரவில் படப்பிடிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்