ஜெயலலிதா கதையில் எம்ஜிஆர் ஆர்.எம்.வீரப்பனாக நடிப்பது யார்? இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தகவல்..

Jayalaitha Biopic Film Thalaivi

தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாகிறது. ஏ.எல்.விஜய் டைரக்டு செய்கிறார். ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

இப்படத்திற்கு இசை அமைக்கும் ஜிவிபிரகாஷ் கூறும்போது,'வெண்ணிற ஆடை படத்தில்தான் முதன்முதலில் ஜெயலலிதா அறிமுகமானார். அப்படத்தில் அவர் நடித்த பாடல் காட்சி ஒன்றை தலைவி படத்துக்காக ஒலிப்பதிவு செய்ய உள்ளோம். ஆனால் இது ரீமிக்ஸ் பாடலாக இருக்கிறது.

அந்தகாலத்தில் அமைக்கப்பட்ட மெட்டுடன் புதிய பாடலாக இது பதிவு செய்யப்பட உள்ளது. இப்படத் தில் எம்ஜிஆர் வேடத்தில் நடிக்கிறார் அரவிந்த் சாமி. ஆர்எம்வீரப்பன் வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கையோடு தொடர்புடைய தெலுங்கு நடிகர் சோபன் பாபு கதாபாத்திரமும் படத்தில் இருக்கிறது' என்றார்.

You'r reading ஜெயலலிதா கதையில் எம்ஜிஆர் ஆர்.எம்.வீரப்பனாக நடிப்பது யார்? இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தகவல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சூர்யா படத்தில் நடித்த நைஜீரிய நடிகர் கைது... உளவு துறையினரிடம் ஒப்படைப்பு...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்