போஸ்டர் வெளியிட்டு மாஸ் காட்டிய சூப்பர் ஸ்டார்... ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து...

Rajinikanth as Aaditya Arunachalam in Darbar

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் தர்பார். கண்டிப்பான போலீஸ் அதிகாரி ஆதித்ய அருணாச்சலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

தர்பார் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் அடுத்தகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் பொங்கல் தினத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். முன்னதாக இப்படத்தில் ரஜினியின் ஸ்டைலான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டது.

தீபாவளிக்கு ரசிகர்களின் ஏமாற்றத்தை தவிர்க்க கையில் துப்பாக்கி யுடன் குறிவைக்கும் அசத்தலான சூப்பர் ஸ்டாரின் தர்பார் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதை ரசிகர்கள் நெட்டில் வைரலாக்கி கொண்டிருக்கின்றனர்.

You'r reading போஸ்டர் வெளியிட்டு மாஸ் காட்டிய சூப்பர் ஸ்டார்... ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிகில் 2ம் பாகம் ராயப்பன் உருவாகுமா?... அட்லி அசத்தலான பதில்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்