கமல்ஹாசன் படத்தில் நடித்த வடிவேலு.. வடிவேலு நடித்த படத்தில் கமல்ஹாசனா?..

Vadivelu Removed From 24-m Pulikesi Kamalhaasan To Replace

பிரபல ஹீரோ நடிக்க வேண்டிய வேடத்தில் மற்றொரு ஹீரோ நடித்தார் என்று அவ்வப் போது சில தகவல்கள் வருவதுண்டு. ஆனால் தற்போது சற்று மாறுதலாக, பிரபல ஹீரோ நடிக்க வேண்டிய ஒரு வேடத்தில் பிரபல காமெடி நடிகர் நடித்ததுபற்றி தகவல் வெளியாகி உள்ளது. அந்த ஹீரோ கமல், காமெடி நடிகர் வடிவேலு.
இதுபற்றிய ருசிகர தகவல் இதோ..

இம்சை அரசன் 23ம் புலிக்கேசி படத்தை சிம்புதேவன் இயக்க ஷங்கர் தயாரித்தார். முன்னதாக இப்படத்தில் எந்த ஹீரோவை நடிக்க வைப்பது என்று ஆலோசனை நடந்தபோது கமல்ஹாசன் உள்ளிட்ட நான்கு முக்கிய ஹீரோக்களின் பெயர்கள் பரிசீலிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட சில காரணங்களால் அவர்களில் எந்த ஹீரோவை யும் இப்படத்தில் நடிக்க வைக்க முடிய வில்லை. கடைசியில் அப்படத்தில் வடிவேலு நடித்தார்.

படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தை இயக்க முடிவாகி வடிவேலுவும் நடிக்க ஒப்புக்கொண் டார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தநிலையில் வடிவேலுவுக்கும், பட தயாரிப்பு தரப்புக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து வடிவேலுக்கு பதிலாக வேறு ஹீரோவை நடிக்க வைக்க இருப்பதாக தெரிகிறது. இதில் கமல்ஹாசனையும் நடிக்க வைக்க அவரிடம் பேசலாம் என்று ஆலோசனையில் பேசப்படுகிறதாம்.

கமல் நடிக்கவிருந்த 23ம் புலிகேசியில் வடிவேலு நடித்தார். 24ம் புலிகேசியில் வடிவேலு நடிக்க ஒப்புக்கொண்டு விலகினார். இந்த படத்தில் கமல் நடிப்பாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.

You'r reading கமல்ஹாசன் படத்தில் நடித்த வடிவேலு.. வடிவேலு நடித்த படத்தில் கமல்ஹாசனா?.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அனுஷ்காவின் அழகில் மயங்கிய பிரபாஸ்.. காதல் குறித்து மனம் திறந்த நடிகர்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்