தல அஜீத்துக்கு ஜோடி பிரியங்கா சோப்ராவின் தங்கையா? பரிணிதி சோப்ரா வருவாரா..

Parineeti Chopra and Thotta Tharani part of Thala Ajith 60

எச்.வினோத் இயக்கத்தில் தல அஜீத்தின் வலிமை படத்தின் தொடக்க விழா பூஜை நடந்தபிறகு அப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது. நயன்தாரா, நஸ்ரியா, ஜான்வி கபூர் பெயர்கள் அடிபட்டு வருகிறது. ஆனால் யாரும் அஜீத் படத்தில் நடிக்கவில்லை என்ற தகவலும் வந்தது. அதை இருவருமே மறுத்துவிட்டர்கள். தற்போது மேலும் சில தகவல்கள் வந்துள்ளது.
பிரியங்கா சோப்ராவின் தங்கை பரிணிதி சோப்ரா. இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர்தான் வலிமை படத்தில் நடிக்க உள்ளதாக பேச்சு எழுந்தது. அதேபோல தேசிய விருது பெற்ற தோட்டா தரணி இப்படத்திற்கு அரங்கம் அமைக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு தகவல்களையும் கூட பட தயாரிப்பாளர் போனிகபூர் உறுதி செய்யவில்லை.
அஜீத்துக்கு பொருத்தமான அதேசமயம் பிறமொழியிலும் ஏற்கனவே பிரபலமான ஒரு நடிகையை தேர்வு செய்வதற்கே பட தரப்பு முடிவு செய்துள்ளது. அதற்கான ஆலோசனை களையும், பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

You'r reading தல அஜீத்துக்கு ஜோடி பிரியங்கா சோப்ராவின் தங்கையா? பரிணிதி சோப்ரா வருவாரா.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஷால் தமன்னா நடித்துள்ள ஆக்‌ஷன்  பட டிரெய்லர் ரிலீஸ்... துருக்கியில் படமான அதிரடி சண்டை காட்சிகள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்