90 வயது கமல் எத்தனை பேரை தீர்த்துகட்டுவார் கணகெடுப்பு தொடக்கம்.. இந்தியன் 2வில் பிக்பாஸ் 3 கனெக்‌ஷன்....

Bigg Boss 3 celebrity stylist Amritha Ram in Kamal Haasan

ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2'ம் பாகத்தில் 90 வயது முதியவராக சுதந்திர போராட்ட தியாகி சேனாபதி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கமல்.

லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது கோபம் அடைந்து இந்தியன் முதல் பாகத்தில் பலரை போட்டுத்தள்ளிய கமல், இரண்டாம் பாகத்தில் எத்தனை பேரை போட்டுத் தள்ளுவாரோ என்று இப்போதே கண்கெடுப்பு தொடங்கிவிட்டது.

நடுத்தர உயர் அதிகாரிகள் மீது காட்டிய கோபத்தை இந்த முறை உயர் பதவியில் இருப்பவர்கள் மீது காட்டுவார் என்று தெரிகிறது. சமீபத்தில் கமல் ஹாசன் சம்மந்தப்பட்ட ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டது இதில் 85 வயது பெண்ணாக நடிக்கிறார் காஜல் அகர்வால். இதற்காக சிறப்பு மேக்அப் அணிகிறார். அவரும் மர்ம கலைகள் கற்றுவருவதால் போட்டுத் தள்ளும் விவகாரத்தில் அவரது கைவண்ணமும இருக்கும் என்று தெரிகிறது.

கமலின் இந்தியன் 2ம் பாகத்துக்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. பிக்பாஸில் கமலின் ஸ்டைலிஷ் தோற்றம் பிரபலமாக பேசப்பட்டது. அதற்கு காரணம் ஸ்டைலரிஷர் அம்ரிதா ராம். அவர்தான் இந்தியன் 2 பாகத்தில் கமலின் ஸ்டைலிஷராக பணியாற்றவுள்ளார்.

90 வயது முதிய தோற்றத்திலும் கடுமையும், துணிச்சலும் தெரியும் வகையில் முரட்டுத்தனத்துடன் கமலின் தோற்றம் இருக்கும் படியான லுக் அதற்கேற்ற பிரத்யேக உடை அலங்காரத்தை அம்ரிதா செய்து வருகிறார். இவர் ஏற்கனவே விஸ்வரூபம்-2 படத்தில் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading 90 வயது கமல் எத்தனை பேரை தீர்த்துகட்டுவார் கணகெடுப்பு தொடக்கம்.. இந்தியன் 2வில் பிக்பாஸ் 3 கனெக்‌ஷன்.... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கூட்ட நெரிசலில் நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்கள்... வலி தாங்க முடியாமல் தவிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்