சோனாக்ஷியை கிண்டல் செய்த நெட்டிஸன்கள்...வீடியோவில் நடிகை ஒப்பன் டாக்..

Sonakshi Sinhas Response To Those Who Trolled Her

லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் பிரபல இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹா மகள் ஆவார். தற்போது சல்மான்கானுடன் தபங் 3 படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்திய வீடியோ ஒன்றில் தன்னைப்பற்றி சமுக வலைத்தளங்களில் வந்த கேலி கிண்டல் டிரோல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். சில வருடங்களாகவே என்னுடைய உடல் பருமன் குறித்து டிரோல் செய்யப் பட்டன. அதற்கு எதிராக கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நினைத்ததேயில்லை.
அவர்களைவிட நான் பெரியவள் என்பதே அதற்குக் காரணம். 30 கிலோ குறைந்த பின்னும் கிண்டலடித்தார்கள். எனது வளைவுகள், எனது எடை, எனது இமேஜ், என நான் எதையும் மறைப்பதில் லை," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த வீடியோவின் ஆரம்பத்தில் அவர் எப்படியெல்லாம் கிண்டலடிக்கப் பட்டார் என்பதையும் தெரிவித்திருக் கிறார்.
"அழகுபோட்டியில் நட்ண்ட்கு செல்லும்போது மாடு, ஆன்ட்டி ஜி, குண்டு, யானை என்றெல்லாம் என்னை கிண்டலடித்துள்ளார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
உடல் பருமனைப் பற்றிய கிண்டல்களுக்கும், அது சார்ந்த நகைச்சுவைக்கும் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

You'r reading சோனாக்ஷியை கிண்டல் செய்த நெட்டிஸன்கள்...வீடியோவில் நடிகை ஒப்பன் டாக்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வடிவேலுவுடன் நடித்த காமெடி நடிகர் திடீர் மரணம்..பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்