கார்த்தியின் கைதி பாக்ஸ் ஆபிஸ் வசூல்...அடடா மழைடா ”லாபம்” மழைடா...

Kaithi Box Office Collection

விஜய்யின் பிகில் படத்துக்கு போட்டியாக கார்த்தியின் கைதி தீபாவளி தினத்தில் திரைக்கு வந்தது. பிகில் படம் 180 கோடி செலவில் உருவாக்காப்பட்டது. அப்படம் தற்போது 200 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது.
'கைதி' படம் 40 கோடி செலவில் உருவானது. பிகிலுக்கு போடியாக இப்படம் வந்தபோதும் நம்பிகையான வசூலை ஈட்டி உள்ளது. ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் ரூ.40 கோடி வசூல் செய்து தயாரிப்பாளருக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் லாபத்தை தர் ஆரம்பித்துவிட்டது.
கைதி படம் தமிழகத்தில் ரூ.19 கோடி வசூல் செய்துள்ளது. அதில் சென்னையின் வசூல் ரூ.1.75 கோடி என்பது குறிப்பிடத் தக்கது. கேரளாவில் ரூ.2.8 கோடி, கர்நாடகாவில் ரூ.3.4 கோடி, ஆந்திராவில் ரூ.7.2 கோடி, வட இந்தியாவில் ரூ.1.5 கோடி வசூல் செய்துள்ளது.
வெளிநாட்டில் மட்டும் இந்த படம் ரூ.6 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பட த்தின் பட்ஜெட் முழுமையாக வசூல் செய்யப்பட்ட நிலையில் தற்போது தயாரிப்பாளுக்கும் விநியோகஸ்தர் களுக்கும் லாபம் கொட்டத் தொடங்கியுள்ளது.

You'r reading கார்த்தியின் கைதி பாக்ஸ் ஆபிஸ் வசூல்...அடடா மழைடா ”லாபம்” மழைடா... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஐஸ்வர்யராயின் மேனேஜரை காப்பாற்றிய ஷாருக்கான்.. அமிதாப் வைத்த தீபாவளி  விருந்தில் பரபரப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்