பிரதமர் மோடியுடன் செல்பி எடுக்க எஸ்,பி,பாலசுப்ரமணியத்துக்கு தடை.. பாலிவுட் மட்டும் ஸ்பெஷலா ? வேதனை வெளிப்படுத்திய பிரபல பாடகர்...

SP Balasubrahmanyam upset with PM Modi

சென்ற மாதம் பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் இணைந்து மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கான், அமீர் கான், கங்கனா ரணாவத், சோனம் கபூர், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், போனி கபூர், இம்தியாஸ் அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடயதுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சி குறித்து பிரபல பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

ஈநாடு நிறுவனர் ராமோஜி ராவ்ஜிக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவரால் தான் அக்டோபர் 29-ம் தேதி பிரதமர் மோடி இல்லத்தில் அளித்த விருந்தில் நான் கலந்து கொள்ள முடிந்தது.

பிரதமர் வீட்டுக்குள் நுழையும் போது எங்கள் அனைவரின் செல்போனும் பாதுகாப்பு காரணங் களுக்காக வாங்கி வைக்கப்பட்டன. அதற்காக பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் எங்களுக்கு டோக்கன் வழங்கினர். ஆனால் அந்த நாளில் பிரதமருடன் சில பிரபலங்கள் செல்ஃபி எடுத்திருக்கின்றனர். சில சம்பவங்கள் நம்மை வாயடைக்க வைக்கும்' என்று எஸ்.பி.பி தனது பதிவில் வேதனை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து பிரதமர் வீட்டுக்குள் பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டும் செல்போனை எடுத்துச் செல்ல சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

You'r reading பிரதமர் மோடியுடன் செல்பி எடுக்க எஸ்,பி,பாலசுப்ரமணியத்துக்கு தடை.. பாலிவுட் மட்டும் ஸ்பெஷலா ? வேதனை வெளிப்படுத்திய பிரபல பாடகர்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிகரெட் பிடிக்கும் நஸ்ரியா கொந்தளிக்கும் ரசிகர்கள்...கணவருடன் நடிக்கும் படத்தில் வில்லங்கம்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்