”சங்கத்தமிழன்” தெலுங்கில் ”விஜய்சேதுபதி” ஆகிறது...வரும் 15ம் தேதி ரிலீஸ்...

vijay sethupathis sangathamizan Release update

ஹீரோ மட்டுமல்ல ஹீரோயின்களுக்கும் மார்க்கெட் உச்சத்துக்கு ஏற்ப அவர்களது பெயர்களில் பாடல்கள் அல்லது படத்திற்கு பெயர்கள் வைப்பது அவ்வப் போது நடக்கிறது. ரஜினிகாந்த் பெயரில் அன்புள்ள ரஜினிகாந்த் வந்துள்ளது. நடிகை நதியா பெயரில் பாடல் வந்துள்ளது. தற்போது மற்றொரு நடிகர் பெயரில் படம் வருகிறது.

ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லன் தற்போது விஜய் 64 படத்தில் விஜய்க்கு வில்லன் என துணிச்சலாக நடிக்கிறார் விஜய்சேதுபதி. இதனால் அவரது மார்கெட் நிலவரம் என்னவோ கூடிக்கொண்டுதான் போகிறது.

தெலுகில் சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்திருந்தார் விஜய்சேதுபதி. இதனால் தெலுங்கிலும் அவருக்கு மவுசு கூடியிருக் கிறது. இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்த ஒரு படத்திற்கு விஜய்சேதுபதி என்றே டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படம் கடந்த தீபாவளி அன்றே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஒருசில காரணங்களால் தள்ளிப்போனது. வரும் நவம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் தெலுங்கு பதிப்பும் அதே நாளில் வெளியாகிறது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு விஜய்சேதுபதி என்றே டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கான டைட்டிலுடன் கூடிய போஸ்டரை படகுழு வெளியிட்டுள்ளது.

You'r reading ”சங்கத்தமிழன்” தெலுங்கில் ”விஜய்சேதுபதி” ஆகிறது...வரும் 15ம் தேதி ரிலீஸ்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குழந்தையை தத்தெடுக்க லாரன்ஸிடம் உதவி கேட்ட நடிகை காஜல்.. பிக்பாஸ் பிரபலத்தின் திடீர் ஆசை...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்