பிகில் 2 வருமா? இயக்குனர் அட்லீ புதுவிளக்கம்..

Vijays Bigil 2nd part Director Atlee reply

தீபாவளியை யொட்டி கடந்த அக்டோபர் மாதம் வெளியான பிகில் படம் உலகம் முழுவதும் வெளியாகி 200 கோடி ருபாய்க்கும் மேல் வசூலித்து 2019ல் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்கிற சாதனையை செய்துள்ளது.
விஜய் நடிக்க அட்லி இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் அட்லீயிடம், பிகில் 2ம் பாகம் வருமா என்று கேட்டதற்கு பதில் அளித்தார்.
அட்லி கூறும்போது, "பிகில் 2 எடுக்க திட்டம் இருக்கிறது. ராயப்பன் எப்படி இவ்வளவு வளர்ந்தார் என்கிற கதை மற்றும் மைக்கேலுக்கு பிகில் என பெயர் வந்தது ஏன் உள்ளிட்ட சம்பங்களை உள்ளடக்கியதாக பிகில் 2 இருக்கும். பார்ப்போம்" என கூறியுள்ளார்.
இதையடுத்து விஜய் ரசிகர்கள் மத்தியில் பிகில் 2 பற்றி பேச்சு தொடங்கியிருக்கிறது.

You'r reading பிகில் 2 வருமா? இயக்குனர் அட்லீ புதுவிளக்கம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS -  நடிகை மீரா மிதுன் மீது போலீஸார் 2 பிரிவில் வழக்கு பதிவு.. கைது நடவடிக்கை எடுக்க முடிவு...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்