விஜய் 64ல் 3 வில்லன்கள்...பட்டியலில் இணைந்த சாந்தனு..

Thalapathy 64 update

விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இதில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானத்திலிருந்து படம் பற்றிய பரபரப்பு அதிகரித்தது. இந்நிலையில் இப்படத்தில் மேலும் 2 பேர் வில்லன்களாக நடிக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இளம் நடிகர் சாந்தனுவும், ஆண்டனி வர்கிஸும் இணை வில்லன்களாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

சாந்தனு விஜய்யின் தீவிர ரசிகர். அபவர் இப்படத்தில் நடிக்கிறார் என்று முதலில் தகவல் வந்தபோது விஜய்யின் நண்பராக அல்லது தம்பியாக நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் அதை ரசிகர்கள் அதிர்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.

You'r reading விஜய் 64ல் 3 வில்லன்கள்...பட்டியலில் இணைந்த சாந்தனு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பா.ரஞ்சித்தின் ”இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” படத்துக்கு யூ சான்று... தினேஷ், ஆனந்தி, ரித்விகா இணைகின்றனர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்