மம்மூட்டியை காண வந்த ரசிகை கதறி அழுததால் பரபரப்பு...நல்லா படிக்கணும்” நடிகர் அட்வைஸ்...

Fangirl breaks down in tears seeing Mammootty

நடிகர் மம்மூட்டியின் வீடு கேரளா மாநிலம் கொச்சியில் உள்ளது. சென்ற ஞாயிறன்று கோழிக்கோட்டிலிருந்து நட்சத்திரா என்ற ரசிகை தோழிகள் சிலரை அழைத்துக்கொண்டு மம்மூட்டியை காண வந்திருந்தார். அவரது வீட்டு முன் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தனர். வீட்டிலிருந்து மம்மூட்டி வெளியில் வந்தால் தூரமாக இருந்து பார்த்துவிட்டு புறப்பட எண்ணியிருந்தனர்.

படப்பிடிப்புக்கு புறப்பட தயாரான மம்மூட்டி வீட்டிலிருந்து வெளியில் வந்தார். அவரிடம், உங்களை பார்க்க ஒரு மணி நேரமாக சில ரசிகைகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

உடனே மம்மூட்டி அந்த பெண்களை தன் அருகில் அழைத்து நலம் விசாரித்தார். தூரமாக இருந்து பார்த்து விட்டுபோக வந்த ரசிகைக்கு மம்மூட்டியே அருகில் அழைத்து விசாரித்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்தார். அவரது அதீத இன்பம் கண்ணீரை வரவழைத்தது. அதைக்கண்ட மம்மூட்டி தனது ரசிகையை தோளில் சாய்த்தபடி தட்டிக்கொடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் மம்மூட்டி தன்னை சந்திக்க வந்த நட்சத்திரா மற்றும் சக தோழிகளுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் தெரிஞ்சதா... என அட்வைஸ் செய்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

You'r reading மம்மூட்டியை காண வந்த ரசிகை கதறி அழுததால் பரபரப்பு...நல்லா படிக்கணும்” நடிகர் அட்வைஸ்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கமல் 60 விழா: ஸ்பெஷல் அழைப்பிதழ் ரெடி... ரஜினி, இளையராஜா, விஜய், அஜீத்துடன் டிசைன்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்