நடிக்க ரெடியாகும் நெடுஞ்சாலை ஷிவதா.. குழந்தைபெற்றதும் உடற்பயிற்சியில் தீவிரம்...

Sshivada getting Ready for shoot Post delivery

ஆரி ஜோடியாக நெடுஞ்சாலை படத்தில் நடித்ததுடன் ஜீரோ, அதே கண்கள் படங்களில் படத்தில் நடித்தவர் ஷிவதா. தற்போது வல்லவனுக்கு வல்லவன், கட்டம், இறவாக்காலம் ஆகிய படங் களில் நடித்து வருகிறார்.

தமிழில் 2 படங்களில் நடித்ததுமே தனது நீண்ட நாள் நண்பர் முரளி கிருஷ்ணனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது

இந்நிலையில் கர்ப்பமான ஷிவதாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. ஒரு சில வாரங்கள் ஓய்வுக்கு பிறகு ஷிவதா நடிப்புக்கு தயாராகும் விதமாக தனது தோற்றத்தை புதுப்பொலிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

பயிற்சியாளர் உதவியுடன் கடுமையான பயிற்சிகள் செய்து வருகிறார். பிரசவத்துக்கு பிறகு உடலில் போட்ட எடையை குறைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். விரைவில் ஷிவதா படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

You'r reading நடிக்க ரெடியாகும் நெடுஞ்சாலை ஷிவதா.. குழந்தைபெற்றதும் உடற்பயிற்சியில் தீவிரம்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மணிரத்னம் இயக்கத்தில் மகனுடன் நடிக்கிறார் ஜெயம் ரவி... 2 முறையாக இணையும் தந்தை- மகன்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்