எப்பவும் டான் மாதிரி இருக்கீங்களே எப்படி.. கலாய்த்த நடிகருக்கு ஷட் அப் சொன்ன நடிகை...

Varalakshmi Sarathkumar replies to Sundeep Kishan in twitter

தாரை தப்படை, சண்டக் கோழி 2, சர்கார் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து தனக்கென ஒருஇடத்தை தக்க வைத்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
தமிழ் மட்டுமின்றி தற்போது தெலுங்கு, மலையாள படங்களிலும் வரலட்சுமிக்கு முக்கிய வேடங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. தெலுங்கில் தெனாலி ராமகிருஷ்ணா பிஏபிஎல் என்ற படத்தில் நடித்திருக்கிறார் வரலட்சுமி. இப்படம் இம்மாதம் வெளியாகிறது. இதுபற்றிய தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் வரலட்சுமி வெளியிட்டிருந்தார்.
வரலட்சுமியின் டிவிட்டர் மெசேஜை பார்த்த அப்பட கதாநாயகன் சந்தீப் கிஷன், 'நீங்கள் எப்போதும் பார்ப்பதற்கு டான் மாதிரியே இருக்கிறீர்களே எப்படி?' என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த வரலட்சுமி, 'ஹா ஹா ஹா ஷட்அப் ராஸ்கல் lol என்று மிரட்டும் தொணியில் நகைச்சுவை ததும்ப பதில் அளித்தார்.

You'r reading எப்பவும் டான் மாதிரி இருக்கீங்களே எப்படி.. கலாய்த்த நடிகருக்கு ஷட் அப் சொன்ன நடிகை... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகை மைனா இரண்டாம் திருமணம்...முதல்கணவர் தற்கொலைக்கு பிறகு பரபரப்பு...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்