நயன்தாராவுக்கு தயாரிப்பாளர் அமெரிக்காவில் விருந்து... அஜீத் படத்தில் நடிக்க கிரீன் சிக்னல்...

Nayanthara, Vignesh Shivan hang out with Boney and Khushi Kapoor in NYC

கடந்த 2 வருடத்துக்கும் மேலாக காதல் பறவைகளாக திரையுலகில் சிறகு விரித்துக்கொண்டிருக்கிறது நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி. இருவருக்கும் இந்த ஆண்டில் திருமணம் அல்லது திருமண நிச்சயதார்த்தம் நடத்த இருவீட்டாரும் பேசி வருகின்றனர். ஆனால் நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணமிருக்கிறது. பல படங்களை வேண்டாம் என்று நயன்தாரா ஒதுக்கினாலும் முக்கிய பிரமுகர்கள் மூலம் பிரஷர் கொடுத்து அவரது கால்ஷீட் பெறுகின்றனர்.

சமீபத்தில் விஜய்யுடன் நடித்த பிகில் படம் திரைக்கு வந்த நிலையில் வரும் பொங்கல் தினத்தில் ரஜினியுடன் நடித் திருக்கும் தர்பார் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அஜீத் படத்தில் நடிக்க கேட்டு நயன்தாரா வலிமை பட குழு சுற்றி வருகிறது.

கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் ரஜினியின் பேட்ட., அஜீத்தின் விஸ்வாசம் திரைக்கு வந்தது. இதில் பேட்ட படத்தைவிட விஸ்வாசம் படம் அதிக கலெக்‌ஷன் செய்தது. இப்படத்தில் அஜீத்துடன் நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார். அதேஜோடி வலிமை படத்துக்கு அமைந்தால் படத்துக்கு வெயிட் கூடும், பிஸ்னஸுக்கும் பிளஸ் ஆக இருக்கும் என்று பட தயாரிப்பாளர் போனிகபூர் கணக்குபோடுகிறார்.

சில தினங்களுக்கு முன் விக்னேஷ்சிவன், நயன்தாரா ஜோடி அமெரிக்கா சென்றது. அங்கு போனிகபூரும் சென்று அவர்களை சந்தித்தார். நியூயார்க் நகரில் ஸ்டார் ஓட்டலில் இரவு விருந்தை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். அப்போது வலிமை படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் போனிகபூர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதை உடனடியாக நயன்தாரா உறுதி செய்யவில்லை.

கால்ஷீட் பற்றி ஆலோசித்துவிட்டு கூறுகிறேன் என்று சொல்லிவிட்டாராம். இதுவே அவர் வலிமை படத்தில் நடிப்பதற்கு கிரீன் சிக்னல் காட்டியதுபோல என வலிமை பட தரப்பு குஷியில் இருக்கிறது. இந்த சந்திப்பின்போது மறைந்த ஸ்ரீதேவி, போனிகபூர் தம்பதிகளின் இரண்டாவது மகள் குஷியும் உடனிருந்தார்.

You'r reading நயன்தாராவுக்கு தயாரிப்பாளர் அமெரிக்காவில் விருந்து... அஜீத் படத்தில் நடிக்க கிரீன் சிக்னல்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அரைகுறை ஆடையில் ரைஸா.. கிளுகிளு மெசேஜ் வெளியிட்டார்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்