700 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரவுடி பேபி பாடல் புதிய சாதனை.. தனுஷ்-சாய் பல்லவி செம்ம குத்து சாங்..

Dhanush and Sai Pallavis Rowdy Baby Song New Achievement

சாய்பல்லவியின் நடிப்பை பற்றி தெரிந்தவர்கள் அவருக்குள் இருக்கும் நடன திறமை யை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். அதை தனுஷ் தனது மாரி2ம் பாகத்தில் சரியாக கணித்து ஒரு ரவுடி பேபி.. குத்து பாடலுக்கு இடம் தந்தார்.
வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சாய் பல்லவி தனுஷுக்கே சவால் விடும் வகையில் ஆடித் தீர்த்தார். அந்த பாடல் வெளியானது முதல் தொடங்கி எங்குபார்த் தாலும் ரவுடிபேபி பாடலாகவே ஒலித்தது.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இந்த பாடலை தனுஷ் எழுதி பாடியிருந்தார். பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். மாரி 2 படம் வெளியான அன்றே இப்பாடல் யூடியூபில் ஏற்றப்பட்டது. அன்று தொடங்கி கடந்த ஜூன் மாதம் வரை 500 மில்லியன் பார்வையா ளர்களை சாதனை படைத்தது. தற்போது 700 மில்லியன் பார்வையாளர்களை அதாவது 70 கோடி பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறது.
மேலும் தென்னிந்திய பாடல்களில் அதிகம் பார்க்கப் பட்ட பாடல் என்ற பெருமையும் பெற்றிருக்கி றது. ரவுடி பேபி என்ற ஒரு பாடலுக்கு மட்டுமே மூன்றரை கோடி ரூபாய் ஷேர் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading 700 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரவுடி பேபி பாடல் புதிய சாதனை.. தனுஷ்-சாய் பல்லவி செம்ம குத்து சாங்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சினிமா தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்... பருத்திவீரன், சிங்கம் தயாரித்தவர்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்