வில்லியாக மாறும் விஜய் நாயகி... யாரென்று தெரியுமா...

Samantha to debut in a web series

சினிமாவுக்கு போட்டியாக டிஜிட்டல் வெப் தளங்கள் வந்துவிட்டன. என்றாலும் அதிலும் திரை நட்சத்திரங்கள் ஊடுருவி டிஜிட்டல் தளத்தையும் தங்கள் வசம் கொண்டு வந்திருக் கின்றனர்.
பிரபல நடிகைகள் பலரும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகின்றனர். லேட்டஸ்ட் டாக இணைந்திருக்கிறார் சமந்தா. விஜய்யுடன் கத்தி, மெர்சல் படங்களில் நடித்ததுடன் தமிழில் சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். இதுவரை டிஜிட்டல் பக்கம் தலைகாட்டாமல் இருந்தவர் தற்போது தி பேமலி மேன் 2 என்ற வெப் தொடரி்ல் நடிக்க ஒப்புக்கொண்டிருக் கிறார். மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாக நடிக்கிறார்.
ஐதராபாத்தில் நடிகை சமந்தாவை, தி பேமலி மேன் 2 படக்குழு சந்தித்து வெப் சீரிஸின் கதையை சொல்ல சமந்தாவுக்கு பிடித்து விட்டது. ஐதராபாத் பகுதி வாழ் பெண் தீவிரவாதியாக சமந்தா நடிக்க உள்ளாராம். இதற்காக ஐதாபாத்தில் இந்தி மொழி பேச கற்று வருகிறார்.
வில்லித்தனமான வேடத்தில் நடிப்பதுபற்றி சமந்தா கூறும்போது, 'வித்தி யாசமான பாத்திரங்களை ஒப்புக்கொள்வதை இப்போதைக்கு விரும்புகிறேன். தற்போது ஏற்கும் வேடமும் அப்படிப்பட்டது தான். டிஜிட்டல் உலகில் ஸ்கிரிப்ட் தான் கிங் என்றார்.

You'r reading வில்லியாக மாறும் விஜய் நாயகி... யாரென்று தெரியுமா... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரதமர் மோடியுடன் பவார் சந்திப்பு.. மகாராஷ்டிராவில் கூட்டணி?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்