90 வயது கெட்டப்புக்கு மாறும் பிரியா பவானி..? கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார்...

Priya Bhavani to play Suganyas role as Kamals wife in Indian 2

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா, ராஜஸ்தான் ஜெய்ப்பூர் போன்ற பல இடங்களில் நடந்து வருகிறது. சேனாபதி இந்தியன் தாத்தா வாக நடிக்கும் கமலுக்கு இப்படத்தின் முதல்பாகத்தில் அவரது மனைவியாக சுகன்யா நடித்திருந்தார்.

முன்னணி ஹீரோக்களுடன் அப்போது ஜோடிபோட்டு நடித்து வந்த சுகன்யாவுக்கு இந்த கதாபாத்திரத்துக்காக 70 வயது தோற்றத்தில் இருப்பதுபோல் முகம் முழுவதும் சுருக்கங்களுடன் மேக்அப் அணிவிக்கப்பட்டது. அந்த கதாபாத்திரம் ஏற்ற பிறகு சுகன்யாவுக்கு படங்களில் இருந்து வந்த மவுசு குறைந்தது. இந்தியன் 2வில் மீண்டும் அவர் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் நடிக்க மறுத்துவிட்டாராம்.

இந்நிலையில் காஜல் அகர்வால் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அவர்தான் கமல் மனைவியாக நடிக்கவிருப்ப தாகவும் இதற்காக 90 வயது மூதாட்டிபோல் மேக்அப் அணிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த பாத்திரத்தில் வேறு நடிகை நடிப்பதாக தகவல் வெளிவருகிறது.

பிரியா பவானி, இந்தியன் 2ம் பாகத்தில் கமலின் ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம். அவருக்கு வயதான மேக்அப் அணிவிக்கப் படவிருக்கிறதாம். ஆனால் இந்த தகவலை பட தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை.

You'r reading 90 வயது கெட்டப்புக்கு மாறும் பிரியா பவானி..? கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஜய் ஆண்டனியின் அக்னி சிறகுகள் ஹிப்பி தோற்றம்.. ஆக்‌ஷன் மூடுக்கு மாறுகிறார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்