ரஜினி, கமலுடன் நடிப்பது எப்போது? தமன்னா வெளியிட்ட ஆசை..

Tamanna wish to act with Rajini and Kamal

தமிழில் விஜய் தொடங்கி விஷால். ஜெயம் ரவி உள்ளிட்ட அனைத்து இளம் ஹீரோக்களுடனும் நடித்திருக்கிறார் தமன்னா. சீனியர் ஹீரோக்கள் ரஜினி, கமலுடன் ஜோடியாக நடித்ததில்லை. இதுபற்றி அவரிடம் கேட்டபோது பதில் அளித்தார்.
தமன்னா கூறியதாவது:
ரஜினிசார், கமல் சார் இருவரயும் ஒரு ரசிகையாக ரசித்திருக்கிறேன். அவர்களுடன் யார் தான் நடிக்க மாட்டேன் என்று சொல்வார் கள். எல்லோருக்குமே அவர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. அவர்களுடன் நடிக்க பொறுத்தமான கதாபாத்திரம் அமைந்தால் நான் நிச்சயம் நடிப்பேன். அவர்கள் இருவரை யும் நான் சிறு வயதிலிருந்து கடவுள்போல் பார்க்கிறேன்.
சினிமாவில் 13 வருடம் கடந்திருக்கிறேன். இந்த ஆண்டு எனக்கு சிறந்த ஆண்டாகும். நான் நடித்த 7 படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் ஒரு தெலுங்கு படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது.
இவ்வாறு தமன்னா கூறினார்.

You'r reading ரஜினி, கமலுடன் நடிப்பது எப்போது? தமன்னா வெளியிட்ட ஆசை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பட்நாவிசுக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களின் கடிதம்.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்