2 மாதத்தில் செல்போனில் வரும் ரூ. 300 கோடி மெகா படம்... ரூ. 70 கோடி நஷ்டத்தால் திடீர் முடிவு..

Sye Raa Narasimha Reddy to stream on Amazon Prime Video

டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த 'சைரா நரசிம்ம ரெட்டி' படம் ரூ. 300 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. சரித்திர படமாக உருவான இதில் அமிதாப்பச்சன், நயன்தாரா, அனுஷ்கா. தமன்னா, விஜய் சேதுபதி என மிகப் பெரிய ஸ்டார்கள் நடித்திருந்தார்.

இப்படம் குறித்து பெரிய அளவில் விளம்பரங்களும் செய்யப்பட்டன. பட புரமோஷன் நடந்தபோது சிரஞ்சீவி, அமிதாப், தமன்னா என பலரும் கலந்துகொண்டனர். அதுபோல் படத்தில் நடித்த நயன்தாராவையும் பங்கேற்க கேட்டபோது மட்டும் மறுத்துவிட்டார். இதுகுறித்து சிரஞ்சீவி தனது மன வருத்தத்தை பதிவு செய்திருந்ததுடன் தமன்னாவை மட்டும் மனதாரா பாராட்டி நயன்தாராவுக்கு ஷாக் கொடுத்திருந்தார்.

சென்ற அக்டோபர் மாதம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பு பெற்றது. ஆரம்பத்தில் விறுவிறு கலெக்‌ஷன் செய்து வந்த நிலையில் பின்னர் மெல்ல வசூல் குறைந்தது. 1 மாதம் கடந்தும் மொத்த வசூல் 230 கோடி மட்டுமே வசூலானதாக தயாரிப் பாளர் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் 70 கோடி நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டிய நிலையில் பட நிறுவனம் அதிரடி முடிவு எடுத்துள்ளது.

அதாவது சைரா நரசிம்ம ரெட்டி படம் வெளியாகி இரண்டே மாதத்தில் இப்படத்தை சேட்டிலைட் டிவிக்கள் மற்றும் மொபைல் செயலிகளில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

படம் வெளியாகி குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகே சாட்டிலைட் டிவிக்களில் ஒளிபரப்ப வேண்டும் என்ற விதிகள் உள்ளது. அதை பின்பற்றாமல் சில தயாரிப்பாளர்கள் சாட்டி லைட் டிவிக்களில் ஒளிபரப்ப அனுமதி அளித்து வருகின்றனர். இது தவறு' என தெரிவித்திருக்கின்றனர்.

You'r reading 2 மாதத்தில் செல்போனில் வரும் ரூ. 300 கோடி மெகா படம்... ரூ. 70 கோடி நஷ்டத்தால் திடீர் முடிவு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெல்லியில் முடியும் தளபதி 64 படப்பிடிப்பு.. சென்னையில் 3ம் கட்ட ஷூட்டிங்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்