30 நாளில் கார்த்தியின் கைதி செயலியில் ரிலீஸ்.. தியேட்டர்காரர்கள் அதிருப்தி..

Hotstar VIP to stream tamil blockbuster Kaithi

எந்தவொரு அனுமதியும் இல்லாமல் புதிய படங்களை தமிழ்ராக்கர்ஸ் இணைய தளத்தில் வெளியிட்டு வருவதால் படத்தின் வசூல் பாதிக்கிறது, பெரும் நஷ்டத்துக்கு தயாரிப்பாளர்கள் உள்ளாகிறார்கள் என்று அடிக்கடி தயாரிப்பாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். போலீஸ் புகார், அரசுக்கு கோரிக்கை, நீதிமன்ற நடவடிக்கை என்று பல்வேறு வகையில் முயற்சி செய்தும் இணைய தளத்தில் புதிய படங்கள் திருட்டுத் தனமாக வருவதை தடுத்தபாடில்லை.
இதையடுத்து தயாரிப்பாளர்கள் வேறு வழிகளில் படங்களை வெளியிட்டு வருமானம் பார்த்து வருகின்றனர். அதிக தியேட்டர்களில் வெளியிட்டு 3 நாட்களில் வசூலை அள்ளுவது என்ற நடைமுறை உள்ள நிலையில் தற்போது படம் வெளியான ஒரு மாதத்திலேயே தனியார் செயலிகளுக்கு படங்களை விற்கும் நடைமுறை வந்திருக்கிறது. அந்த வகையில் தீபாவளிக்கு திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற கார்த்தியின் 'கைதி' படம் தற்போது தனியார் செயலியில் வெளியிட அனுமதி தந்திருக்கிறார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.
தியேட்டரில் ரிலீஸ் ஆன 30 நாட்களில் கைதி செயலியில் ரிலீஸ் ஆகிறது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்திருக்கிறது.
இதுகுறித்து பிரபு கூறும்போது, தியேட்டரில் வெற்றிகரமாக ஓடும் படத்தை எடுத்துவிட்டு ஆன்லைன் சேனல்களில் அதனை வெளியிடக்கூடாது. அந்த நடைமுறை தொடர்ந்தால் தியேட்டருக்கு வரும் பார்வையாளர்கள் குறைந்துவிடுவார்கள் என்கிறார்கள். தியேட்டரில் படம் வெளியான 3வது வாரத்திலிருந்து பைரசி, குறைவான வசூல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. அப்படி குறையும் வசூலை தயாரிப்பாளர்கள் இதன் மூலம் மட்டுமே ஈடு செய்ய முடியும்' என்றார்.
சமீபத்தில்தான் சிரஞ்சீவி, அனுஷ்கா, தமன்னா, நயன்தாரா நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படமும் தனியார் செயலியில் வெளியிட அனுமதிதரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading 30 நாளில் கார்த்தியின் கைதி செயலியில் ரிலீஸ்.. தியேட்டர்காரர்கள் அதிருப்தி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தர்பாரில் நார்நாராக கிழிக்கும் ரஜினி.. நெருப்புப் பேரோட நீ குடுத்த ஸ்டாரோட சும்மா கிழி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்