சந்தானத்துடன் மீண்டும் இணையும் ஜாங்ரி.. ஜோடி கைமாறுகிறது..

Santhanam and Madhumitha reunite

நடிகர் சிம்புவால் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சந்தானம்.
அதன்பிறகு ரஜினிகாந்த், அஜீத், விஜய், ஆர்யா, உதயநிதி என பல்வேறு ஹீரோக்களுடன் இணைந்து காமெடி வேடங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் ஹீரோவுக்கு நண்பராக நடிக்கும் பாணியை மூட்டைகட்டி வைத்துவிட்டு இனிமே ஹீரோ வாகத்தான் நடிப்பேன் என்று முடிவு செய்து அதன்படி இன்றுவரை வெற்றிகரமான ஒரு ஹீரோவாக நடித்து வருகிறார்.
அவர் நடித்த தில்லுக்கு துட்டு2, A1 படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. தற்போது டிக்கிலோனா என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். அவருக்கு ஜோடியாக அனேகா நடிக்கவுள்ளார். இவர் நட்பே துணை படத்தில் கதாநாயகி நடித்தவர். யோகிபாபு, ஆனந்த்ராஜ் போன்றவர்களும் நடிக்கின்றனர். இதில் சிறப்பு அறிமுகமாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிகராக இணைகிறார்.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துடன் இணைந்து காமெடி வேடத்தில் நடித்த ஜாங்ரி மதுமிதா மீண்டும் இப்படத்தில் இணைகிறார். ஆனால் இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிப்பதால் மதுமிதா அநேகமாக யோகி பாபு அல்லது ஆனந்தராஜுக்கு ஜோடியாக நடிப்பார் என்று தெரிகிறது.

You'r reading சந்தானத்துடன் மீண்டும் இணையும் ஜாங்ரி.. ஜோடி கைமாறுகிறது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நயன்தாராவின் பக்திபடம் தொடங்கியது, விரதம் ஆரம்பிப்பது எப்போது?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்