தளபதி 64 சேட்டிலைட் உரிமை கைப்பற்றிய நிறுவனம்.. 3ம் கட்ட படப்படிப்பிலேயே சூடு பிடித்த பிஸ்னஸ்..

Thalapathy 64 Satellite Rights Sold Out

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 64'. சென்னை, டெல்லியில் 2 கட்ட படப் பிடிப்பு முடிந்து 3ம் கட்டமாக கர்நாகடாவில் உள்ள சிமோகாவில்நடக்கிறது. அங்குள்ள சிறையில் விஜய், விஜய்சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக உள்ளன.
இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. படப்பிடிப்பு தொடங்கி நடந்து வரும் நிலையிலேயே விஜய் 64 பட சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டிருப்பது சினிமா வட்டாரத்தில் இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸின் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
தளபதி 64 படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய்யுடன் அவர் நடித்த முக்கிய காட்சிகள் டெல்லியில் படமானது.
தீபாவளிக்கு திரைக்கு வந்த கைதி படத்தை லோகேஷ் கனகராஜ் தளபதி 64 படத்தை இயக்குவதுடன் விஜய்யின் பிகில் பட வசூலை சில இடங்களில் கைதி படம் மிஞ்சியதும் தளபதி 64 படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
அந்த எபெக்ட்தான் 3ம் கட்ட படப்பிடிப்பி லேயே படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸ் நடந்து முடித்திருக்கிறது என்கிறது பட வட்டாரம்.

You'r reading தளபதி 64 சேட்டிலைட் உரிமை கைப்பற்றிய நிறுவனம்.. 3ம் கட்ட படப்படிப்பிலேயே சூடு பிடித்த பிஸ்னஸ்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சரித்திர படத்தில்  நடிக்கிறார் நெடுஞ்சாலை ஹீரோ.. 10 கிலோ எடை குறைக்கிறார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்