இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ இட விவகாரம்.. சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பியது ஐகோர்ட்...

Ilayaraja gave complaint against Prasad studio

கடந்த 40 ஆண்டுகாலமாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஒலிப்பதிவு கூடத்தில் தான் இசை அமைத்து வருகிறார். இதுநாள் வரை பிரச்னை இல்லாமலிருந்த நிலையில் தற்போது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இளையராஜாவை காலி செய்ய சொல்லி கேட்டிருக்கிறது. அதற்கு இளையராஜா மறுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் இளையராஜா வுக்கு ஆதரவாக பாரதிராஜா தலைமையில் இயக்குனர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதில் தீர்வு எதுவும் ஏற்படவில்லை
இப்பிரச்னை தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். சிட்டி சிவில் நீதிமன்றம் இதுதொடர் பான வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது. மேலும், பிரசாத் ஸ்டுடியோவில் 42 ஆண்டுகளாக சுமார் 6000 பாடல்கள் இசையமைத்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக விசாரணை செய்த உயர் நீதிமன்றம், இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இடையேயான விவகாரத்தை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வைத்து உத்தரவிட்டது.

You'r reading இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ இட விவகாரம்.. சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பியது ஐகோர்ட்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மிதாலிராஜ் வாழ்க்கை படத்தில் டாப்ஸி.. டோனி, சச்சின் படத்தை தொடர்ந்து உருவாகும் பயோபிக்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்