கோடிகளுடன் ராஷ்மிகா பின்னால் சுற்றும் தயாரிப்பாளர்கள்.. கண்டுகொள்ளாமல் மவுனம்..

Rashmika Mandanna Says No To Naga saithanya

கோடிகளில் காசோலையை எழுதி வைத்துக் கொண்டு ராஷ்மிகா கால்ஷீட்டுக்காக அவர் பின்னலேயே பல தயாரிப்பாளர்கள் சுற்றி வந்துக்கொண்டிருக்க அவரோ கண்டுகொள் ளாமல் மவுனம் காக்கிறார்.

விஜய் தேவரகொண்டா நடித்த டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் (தெலுங்கு) படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா. இப்படங்கள் வெற்றி பெற்றது. இதையடுத்து ராஷ்மிகாவுக்கு மவுசு கூடியதுடன் ராசியான நடிகை, திறமையான நடிகை என புகழத் தொடங்கினார். அவரது கால்ஷீட்டை பெறுவதற்காக பல தயாரிப்பா ளர்கள் கோடிகளில் செக் எழுதி வைத்துக் கொண்டு அவரது பின்னாலேயே அலைந்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எந்த செக்கையும் வாங்கிப் போடாமல் மவுனம் காத்து வருகிறார்.

சிறிய ஹீரோக்களுடன் ஜோடி போடுவதை ராஷ்மிகா விரும்பவில்லையாம். அதனால் அதுபோன்ற வாய்ப்புகளுடன் வரும் தயாரிப்பாளர்கள் பெரிய சம்பளம் கொடுத்தாலும் அதை ஏற்க மறுத்து விடுகிறாராம். அதேசமயம், முன்னணி ஹீரோக்கள் படம் என்றால் மட்டுமே ராஷ்மிகா அதுபற்றி காதுகொடுத்து கேட்கிறார்.

சமீபத்தில் கூட நாக சைதன்யா நடிக்கும் படமொன்றில் நடிக்க ராஷ்மிகாவிடம் கால்ஷீட் கேட்டபோது ஏதேதோ காரணம் சொல்லி நழுவிவிட்டாராம். இத்தனைக்கும் இப்படத்தை கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய இயக்குனர் இயக்குவதாக கூறப்படுகிறது.

You'r reading கோடிகளுடன் ராஷ்மிகா பின்னால் சுற்றும் தயாரிப்பாளர்கள்.. கண்டுகொள்ளாமல் மவுனம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பொன்னியின் செல்வனில் சண்டகோழி வில்லன்.. குதிரை ஏற்றம், வாள் பயிற்சி பெறுகிறார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்