டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த தனுஷ்-சாய்பல்லவி.. ஹே.. கோலி சோடாவே ரவுடி பேபி..

Dhanush and Sai Pallavis Maari 2 Song

தனுஷ், சாய் பல்லவி நடித்த படம் 'மாரி 2'. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தில் ஹேய் கோலி சோடாவே என்று தொடங்கும் ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் பாடகி திஹி உடன் இணைந்து பாடியிருந்தார். தனுஷ், சாய்பல்லவி நடனம் ஆடி அசத்தியிருந்தனர்.
ஸ்டைலான மற்றும் குத்தாட்ட அசைவுகளையும் கலந்து நடன பயிற்சி அளித்திருந்தார் பிரபுதேவா. இப்பாடல் வெளியானதும் நெட்டில் வைரலானது.
இணைய தள யூ டியூபில் தமிழ்ப் பாடல் களில் அதிகம் ரசித்த பாடல் என்று பாராட்டு பெற்றதுடன் சில வாரங்களுக்கு முன் 70 கோடி பேர் பார்த்திருந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை 72 கோடி யாக உயர்ந்து இந்த வருடம் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன பாடல்கள் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் 7 வது இடம் எட்டிப் பிடித்திருக்கிறது.

You'r reading டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த தனுஷ்-சாய்பல்லவி.. ஹே.. கோலி சோடாவே ரவுடி பேபி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரஜினி படத்தில்  3 திருநங்கைகள் பாடிய பாடல்..  அனிருத் அளித்த வாய்ப்பால் மகிழ்ச்சி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்