கிருஷ்ணா நடிப்பில் வெளியான களறி டீசர்!

நடிகர் கிருஷ்ணாவின் 'களறி' திரைப்படத்தின் டீசர் வெளியாகி ட்ரெண்ட் அடித்து வருகிறது.

இயக்குநர் கிரண்சந்த் இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணாவின் அடுத்தப் படமாக உருவாகி வருகிறது 'களறி'. செந்தில் கெலோத்தின் 'நக்‌ஷ்சத்ரா மூவி மேஜிக்' தயாரிப்பு நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. நடிகர் கிருஷ்ணா கதாநாயகனாகவும் வித்யா பிரதீப் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு வி.வி.பிரசன்னா இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ள இத்திரைப்படத்துக்கு சண்டை இயக்கத்துக்கு ஸ்டன்னர் சாம் சண்டைப் பயிற்சியாளராக உள்ளார். 'திங்க் மியூசிக்' பேனரின்கீழ் வெளியாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

You'r reading கிருஷ்ணா நடிப்பில் வெளியான களறி டீசர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருட்டுப் பட்டம் கட்டி பழங்குடி இளைஞர் அடித்துக் கொலை - முதல்வர் கண்டனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்