குடியுரிமை சட்டத்துக்கு பேட்ட இயக்குனர் எதிர்ப்பு.. இந்த பூமி எவனுக்கும் சொந்தம் கிடையாது..

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான மத்திய பாஜ அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தி நிறைவேற்றியது.

வெளிநாட்டிலிருந்து வந்த முஸ்லிம் தவிர மற்றவர்களுக்கு குடியுரிமை வழங்க சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது அதற்கு இந்தியா முழுவதும் மாணவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியுரிமை சட்டம் குறித்து ரஜினி நடித்த பேட்ட படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் டிவிட்டரில் கோபத்தை வெளிப்படுத்து இருக்கிறார்.

இந்தியாவை மதசார்பின்மை நாடாகவே வைத்திருப்போம். குடியுரிமை சட்டமானது மதசார்பின்மைக்கு முற்றிலும் எதிரானது. மாணவர்கள் மீது போலீசார் வன்முறை பிரயோகிப்பதற்கும் வெளி நாட்டுகார்களுக்கு குடியுரிமை தருவதற்கும், எதிர்ப்பு தெரிவிப்போம். இந்த பூமி எவனக்கும் அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது' என பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்திருக்கிறார்.

You'r reading குடியுரிமை சட்டத்துக்கு பேட்ட இயக்குனர் எதிர்ப்பு.. இந்த பூமி எவனுக்கும் சொந்தம் கிடையாது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நேரடியாக டிஜிட்டல் தளத்துக்கு வந்த படம்.. டைரக்டர் வெங்கட்பிரபு அதிரடி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்