ஏ.ஆர்.ரஹ்மானின் ஒற்றை டிவிட்.. இணைய தளத்தில் தீயாய் பரவுகிறது..

இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். அடிக்கடி சமூக வலைதளத்தில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடுமுழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வந்த முஸ்லிம்களை தவிர மற்ற இனத்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. போலீசார் தடி அடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகள் வீசியும் சில இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை கலைக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் ஏ.ஆர்.ரஹ்மான் டிவிட்டரில் தனது முழுபெயரான அல்லா ரக்கா ரஹ்மான் என பதிவிட்டிருக்கிறார். இந்த ஒற்றை டிவிட் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ரீ டிவிட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

You'r reading ஏ.ஆர்.ரஹ்மானின் ஒற்றை டிவிட்.. இணைய தளத்தில் தீயாய் பரவுகிறது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெற்றோர் பிரியதர்ஷன்-லிசி விவாகரத்து.. மகள் கல்யாணி என்ன சொல்கிறார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்