வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா,, கலைப்புலி தாணு தயாரிக்கிறார்..

அசுரன் படத்தையடுத்து சூரி நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

தனுஷ் நடிக்க வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரிக்கிறார். எழுத் தாளர் பூமணி எழுதிய, 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு அசுரன் படம் உருவானதுபோல் சூர்யா படமும் ஒரு நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளதாக தெரிகிறது.

சூர்யா தற்போது சுதா கொங்னா இயக்கும் சூரரைப்போற்று படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

You'r reading வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா,, கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து  சிம்பு - ஹன்சிகா  அட்டகாசம்.. டைரக்டர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்