ஷாலினி பாண்டே மீது தயாரிப்பாளர் மோசடி வழக்கு.. ஷூட்டிங் வர மறுத்ததால் பிரச்னை..

முதன்முறையாக அருண் விஜய் - விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் 'அக்னி சிறகுள்' படத்தைை நவீன் இயக்குகிறார். இவர் 'மூடர் கூடம்' படத்தை இயக்கியவர். டி.சிவா தயாரிக்கிறார்.

இதில் ஷாலினி பாண்டே முதலில் ஒப்பந்தமானார் பின்னர் அவரால் கால்ஷிட் இல்லாத காரணத்தால் நடிக்க முடியவில்லை. அந்த வேடத்தில் அக்ஷரா ஹாசன் நடிக்கிறார். இந்நிலையில் ஷாலினி பாண்டே மீது தயாரிப்பாளர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது,'நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடம் என்பதால் 'அர்ஜூன் ரெட்டி' பார்த்து ஷாலினி பாண்டேவை எங்கள் படத்தில் ஒப்பந்தம் செய்தோம். முதலில் 100 நாட்கள் கால்ஷீட் வேண்டும் என ஒப்பந்தம் செய்து 27 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.

இதற்கிடையில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இருவரும் வேறு படங்களில் நடிக்கச் சென்றுவிட்டனர். மீண்டும் அவர்களை ஒருங்கிணைத்து 40 நாட்கள் நடிக்க வைக்க 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. பின்னர் ஷாலினி பாண்டேவை நடிக்க அழைத்த போது, தான் இந்தி படத்தில் நடிப்பதாக கூறியதுடன் தனது கால்ஷீட்டை மாற்றம் செய்ய கேட்டார்.

ஆனால் மீண்டும் இரண்டு ஹீரோக்களையும் ஒரே தேதிகளில் நடிக்க வைப்பது சிரமம் என்றோம். ஆனாலும் அவர் அதை ஏற்க மறுத்து அவர் இந்தி படம் தான் எனக்கு முக்கியம் என்றார். அதன் பிறகே அக்ஷரா ஹாசனை ஒப்பந்தம் செய்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.

தற்போது ஷாலினி பாண்டே மீது மோசடி வழக்கு தாக்கல் செய்திருக்கிறோம். எங்கள் நோக்கம் அவரை காயப்படுத்த வேண்டும் என்பதில்லை. 27 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். அதற்கான பொருட்செலவை ஈடுகட்டவே இந்த நடவடிக்கை
இவ்வாறு கூறி உள்ளார்.

You'r reading ஷாலினி பாண்டே மீது தயாரிப்பாளர் மோசடி வழக்கு.. ஷூட்டிங் வர மறுத்ததால் பிரச்னை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஷ்ணு விஷால் புது தகவல்.. இந்த ஆண்டுடன் சிகரெட் புகைப்பதை.. 

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்