நல்ல படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கணும்.. மாதவன் கவலை..

அலைபாயுதே படம் மூலம் நடிகர் மாதவனை தமிழில் அறிமுகம் செய்து வைத்தார் இயக்குனர் மணிரத்னம். சாக்லெட் பாயாக பல ஆண்டுகளாக வலம் வந்தவர் ஒரு கட்டத்தில் தனது நடிப்பு பாணியை மாற்றி தம்பி, ஆயுத எழுத்து, ரன் போன்ற படங்களில் ஆக்‌ஷன் பாணியை முயற்சித்தார்.

அது வெற்றிபெற்றாலும் தொடர்ந்து அவருக்கு ஆக்‌ஷன் ஹீரோ கதைகள் வரவில்லை. அன்பே சிவம் படத்தில் கமலுடன் இணைந்து நடித்தார். வேட்டை படத்தில் ஆர்யாவுடன் நடித்தவர் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இறுதிச்சுற்று படத்தில் கிக்பாக்ஸிங் பயிற்சியாளராக நடித்தார்.

இதையடுத்து விஜய்சேதுபதியுடன் இணைந்து விக்ரம் வேதா படத்தில் நடித்திருந்தார். இப்பொழுது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதையில் நம்பி நாராயணனாக நடிக்கிறார். அப்படத்துக்கு ராக்கெட்டரி: தி நம்பி எபெக்ட் என பெயரிபட்பட்டுள்ளது.

கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாதவன் பங்கேற்று பேசினார். 'சினிமாவில் மசாலா படங்க ளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. நல்ல படங்கள் எடுத்தால் அதை ரிலீஸ் செய்ய காத்திருக்க வேண்டி உள்ளது. இறுதிச்சுற்று பெரும் வரவேற்பை பெற்றது. நல்ல படம் என்று பாராட்டு பெற்றது. ஆனாலும் அப்படத்தை ரிலீஸ் செய்ய 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

என்னை பொறுத்தவரை நல்ல படங்களாகவே தேர்வு செய்து நடிக்கிறேன். அதனால்தான் அதிக படங்கள் நடிக்க முடிவதில்லை. இப்போதும் நிறைய இயக்குனர்கள் கதை சொல்ல காத்திருக்கிறர்கள். அதில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பேன்' என்றார்.

You'r reading நல்ல படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கணும்.. மாதவன் கவலை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இன்று சூரியகிரகணம் கண்ணாடி அணியாமல் பார்க்கக் கூடாது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்